தமிழ் சமகால வேதாகமம் — 2022 (Biblica மூல உரை)

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 3

இந்த அதிகாரத்தைத் தமிழில் வாசிக்கலாம். Divine Threads ஆய்வுகள் பின்னர் சேர்க்கப்படும்.

1தாவீது எப்ரோனில் இருக்கும்போது பிறந்த மகன்கள் இவர்களே: யெஸ்ரியேலைச் சேர்ந்த அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் மூத்த மகன்; கர்மேலைச் சேர்ந்த அபிகாயிலினிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாவது மகன்.
2கேசூரின் அரசன் தல்மாயின் மகள் மாக்காளிடத்தில் பிறந்த அப்சலோம் மூன்றாவது மகன்; ஆகீத் பெற்ற அதோனியா நான்காவது மகன்.
3அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாவது மகன்; தாவீதின் மனைவி எக்லாளின் பெற்ற இத்ரேயாம் ஆறாவது மகன்.
4இந்த ஆறுபேரும் தாவீதிற்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே அவன் ஏழு வருடமும் ஆறு மாதமும் ஆட்சிசெய்தான். தாவீது எருசலேமில் முப்பத்துமூன்று வருடம் ஆட்சிசெய்தான்.
5எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள்: சிமீயா, ஷோபாப், நாத்தான், சாலொமோன்; இவர்கள் நால்வரும், அம்மியேலின் மகள் பத்சேபாளுக்குப் பிறந்தார்கள்.
6அங்கே இன்னும் இப்கார், எலிசூவா, எலிப்பேலேத்,
7நோகா, நெப்பேக், யப்பியா,
8எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற ஒன்பதுபேரும் தாவீதின் மகன்கள்.
9தாவீதின் மறுமனையாட்டியின் மகன்களைத் தவிர இவர்கள் எல்லோரும் தாவீதின் மகன்கள். தாமார் இவர்களின் சகோதரி. யூதாவின் அரசர்கள்
10சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; அவனுடைய மகன் அபியா; அவனுடைய மகன் ஆசா, அவனுடைய மகன் யோசபாத்.
11அவனுடைய மகன் யோராம், அவனுடைய மகன் அகசியா, அவனுடைய மகன் யோவாஸ்,
12அவனுடைய மகன் அமத்சியா, அவனுடைய மகன் அசரியா, அவனுடைய மகன் யோதாம்,
13அவனுடைய மகன் ஆகாஸ், அவனுடைய மகன் எசேக்கியா, அவனுடைய மகன் மனாசே,
14அவனுடைய மகன் ஆமோன், அவனுடைய மகன் யோசியா.
15யோசியாவின் மகன்கள்: மூத்த மகன் யோகனான், இரண்டாவது மகன் யோயாக்கீம், மூன்றாவது மகன் சிதேக்கியா. நான்காவது மகன் சல்லூம்.
16யோயாக்கீமின் மகன்கள்: அவன் மகன் எகொனியாவும், அவன் மகன் சிதேக்கியாவும். நாடுகடத்தப்பட்டபின் அரச வம்சாவழி
17சிறைபட்ட எகொனியாவின் சந்ததிகள்: அவனுடைய மகன் செயல்தியேல்,
18மல்கிராம், பெதாயா, சேனாசார், எக்கமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
19பெதாயாவின் மகன்கள்: செருபாபேல், சிமேயி. செருபாபேலின் மகன்கள்: மெசுல்லாம், அனனியா; இவர்களின் சகோதரி செலோமித்.
20இவர்களோடு இன்னும் ஐந்துபேர் இருந்தனர்: அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊஷாபேசேத்.
21அனனியாவின் சந்ததிகள்: பெலத்தியாவும், எசாயாவும், ரெபாயாவினதும், அர்னானினதும், ஒபதியாவினதும், செக்கனியாவின் மகன்களும் ஆவர்.
22செக்கனியாவின் சந்ததிகள்: செமாயாவும், அவனுடைய மகன்களுமான அத்தூஸ், எகெயால், பாரியா, நெயெரியா, செப்பாத் என்பவர்களான ஆறுபேர்.
23நெயெரியாவின் மகன்கள்: எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் ஆகிய மூவர்.
24எலியோனாயின் மகன்கள்: ஓதாவியா, எலியாசீப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி ஆகிய ஏழுபேர்.
Original work: Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™
பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc.
Original work: Biblica® Open Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission for the original work. This independent Divine Threads reading adaptation is not a Biblica-branded publication or endorsement.

The original Bible translation is available under Creative Commons Attribution-ShareAlike 4.0 International (CC BY-SA 4.0). The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible. Source and full copyright and trademark requirements. Changes in this Divine Threads adaptation: reading text is arranged in verse rows and source HTML, navigation, editorial headings, introductions and note popups are omitted. Original Scripture wording and combined verse labels are retained. This adaptation of Scripture remains under CC BY-SA 4.0; Divine Threads research studies are separately authored.