தமிழ் சமகால வேதாகமம் — 2022 (Biblica மூல உரை)

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 2

இந்த அதிகாரத்தைத் தமிழில் வாசிக்கலாம். Divine Threads ஆய்வுகள் பின்னர் சேர்க்கப்படும்.

1இஸ்ரயேலின் மகன்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
2தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள். யூதா எஸ்ரோனின் மகன்கள்
3யூதாவின் மகன்கள்: ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூவரும் சூவாவின் மகளான கானானிய பெண்ணின் மகன்கள். யூதாவின் மூத்த மகன் ஏர் என்பவன் யெகோவாவின் பார்வையில் கொடுமையானவனாய் இருந்தான். அதனால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார்.
4யூதாவின் மருமகள் தாமார் என்பவள் யூதாவுக்கு பேரேஸ், சேரா என்பவர்களைப் பெற்றாள். யூதாவிற்கு மொத்தம் ஐந்து மகன்கள் இருந்தார்கள்.
5பேரேஸின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.
6சேராவின் மகன்கள்: சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
7கர்மீயின் மகன்: ஆகார், இவன் யெகோவாவுக்கென விலக்கப்பட்ட பொருட்களை எடுத்ததால், இஸ்ரயேலுக்குக் கேட்டை உண்டுபண்ணினான்.
8ஏத்தானின் மகன்: அசரியா.
9எஸ்ரோனின் மகன்கள்: யெராமியேல், ராம், காலேப். எஸ்ரோனின் மகனான ராமின் சந்ததி
10ராம் அம்மினதாபின் தகப்பன், அம்மினதாப் யூதா மக்களுக்குத் தலைவனாக இருந்த நகசோனின் தகப்பன்.
11நகசோன் சல்மாவின் தகப்பன், சல்மா போவாஸின் தகப்பன்,
12போவாஸ் ஓபேத்தின் தகப்பன், ஓபேத் ஈசாயின் தகப்பன்.
13ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: மூத்த மகன் எலியாப், இரண்டாவது மகன் அபினதாப், மூன்றாவது மகன் சிமெயா,
14நான்காவது மகன் நெதனெயேல், ஐந்தாவது மகன் ரதாயி,
15ஆறாவது மகன் ஓத்சேம், ஏழாவது மகன் தாவீது.
16அவர்களின் சகோதரிகள் செருயாள், அபிகாயில். செருயாளின் மூன்று மகன்கள் அபிசாய், யோவாப், ஆசகேல் என்பவர்கள்.
17அபிகாயில் அமாசாயின் தாய்; அமாசாவின் தகப்பன் இஸ்மயேலியனாகிய யெத்தேர் என்பவன். எஸ்ரோனின் மகன் காலேப்
18எஸ்ரோனின் மகன் காலேப் எரீயோத் எனப்பட்ட தன் மனைவியாகிய அசுபாளின்மூலம் பெற்ற மகன்கள்: ஏசேர், ஷோபாப், அர்தோன்.
19அசுபாள் இறந்தபின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு ஊர் என்பவனைப் பெற்றாள்.
20ஊர் ஊரியின் தகப்பன், ஊரி பெசலெயேலின் தகப்பன்.
21பின்பு எஸ்ரோன் அறுபது வயதானபோது கீலேயாத்தின் தகப்பன் மாகீரின் மகளைத் திருமணம் செய்து அவளுடன் உறவுகொண்டான். அவள் அவனுக்கு செகூப்பைப் பெற்றாள்.
22செகூப் யாவீரின் தகப்பன்; இவன் கீலேயாத்திலே இருபத்துமூன்று பட்டணங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.
23ஆனால் கேசூர், ஆராம் என்பவர்கள் யாவீரின் கிராமங்களையும், கேனாத்தையும் அதைச் சூழ்ந்திருந்த குடியிருப்புகளான அறுபது ஊர்களையும் கைப்பற்றினார்கள். இவர்கள் எல்லோரும் கீலேயாத்தின் தகப்பனான மாகீரின் சந்ததிகள்.
24எஸ்ரோன் காலேபின் ஊரான எப்பிராத்தாவில் இறந்தபின், அவனுடைய மனைவி அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தலைவனான அசூரைப் பெற்றாள். எஸ்ரோனின் மகன் யெராமியேல்
25எஸ்ரோனின் முதற்பேறான யெராமியேலின் மகன்கள்: முதற்பேறானவன் ராம், மற்றவர்கள் பூனா, ஓரேன், ஓத்சேம், அகியா.
26யெராமியேலுக்கு அத்தாராள் என்னும் வேறோரு மனைவியும் இருந்தாள்; இவள் ஓனாம் என்பவனின் தாய்.
27யெராமியேலின் முதற்பேறானவனான ராமின் மகன்கள்: மாஸ், யாமின், எக்கேர்.
28ஓனாமின் மகன்கள்: சம்மாய், யாதா. சம்மாயின் மகன்கள்: நாதாப், அபிசூர்.
29அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல். அவள் அவனுக்கு அக்பான், மோளித் என்பவர்களைப் பெற்றாள்.
30நாதாபின் மகன்கள்: சேலேத், அப்பாயிம். சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனான்.
31அப்பாயிமின் மகன்: இஷி, அவன் சேசானின் தகப்பன், சேசான் அக்லாயின் தகப்பன்.
32சம்மாயின் சகோதரனான யாதாவின் மகன்கள்: யெத்தெர், யோனத்தான். யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனான்.
33யோனத்தானின் மகன்கள்: பெலெத், சாசா. இவர்கள் யெராமியேலின் சந்ததிகள்.
34சேசானுக்கு மகன்கள் இல்லை; மகள்கள் மட்டுமே இருந்தார்கள். சேசானுக்கு எகிப்தைச் சேர்ந்த யர்கா என்னும் வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
35சேசான் தனது மகளை அவனுடைய வேலைக்காரனாகிய யர்காவுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். அவர்களுக்கு அத்தாயி என்ற மகன் இருந்தான்.
36அத்தாயி நாத்தானின் தகப்பன்; நாத்தான் சாபாதின் தகப்பன்.
37சாபாத் எப்லாலின் தகப்பன்; எப்லால் ஓபேத்தின் தகப்பன்.
38ஓபேத் ஏகூவின் தகப்பன்; ஏகூ அசரியாவின் தகப்பன்.
39அசரியா ஏலேஸின் தகப்பன்; ஏலேஸ் எலெயாசாவின் தகப்பன்.
40எலெயாசா சிஸ்மாயின் தகப்பன். சிஸ்மாய் சல்லூமின் தகப்பன்.
41சல்லூம் எக்கமியாவின் தகப்பன்; எக்கமியா எலிஷாமாவின் தகப்பன். காலேபின் வம்சங்கள்
42யெராமியேலின் சகோதரனான காலேபின் மகன்கள்: சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பேறானவனும், எப்ரோனின் தகப்பனாகிய மரேஷாவின் மகன்களுமே.
43எப்ரோனின் மகன்கள்: கோராகு, தப்புவா, ரெகெம், செமா.
44செமா ரேகேமின் தகப்பன்; ரேகேம் யோர்க்கேயாமின் தகப்பனான ரெக்கேமின் தகப்பன். ரெகெம் சம்மாயின் தகப்பன்.
45சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
46காலேபின் மறுமனையாட்டி எப்பா என்பவள் ஆரான், மோசா, காசேஸ் என்பவர்களின் தாய். ஆரான் காசேஸின் தகப்பன்.
47யாதாயின் மகன்கள்: ரேகேம், யோதாம், கேசான், பெலெத், எப்பா, சாகாப்.
48காலேபின் மறுமனையாட்டி மாக்காள் என்பவள் சேபேர், திர்கானா ஆகியோரின் தாய்.
49அதோடு அவள் மத்மன்னாவின் தகப்பன் சாகாபையும், மக்பேனாவினதும் கிபியாவினதும் தகப்பனான சேவாவையும் பெற்றாள். அக்சாள் என்பவள் காலேபின் மகள்.
50இவர்கள் எல்லோரும் காலேபின் சந்ததிகளாவர். எப்ராத்தாளின் முதற்பேறானவனான ஊரின் மகன்கள்: கீரியாத்யாரீமின் தகப்பனான சோபால்,
51பெத்லெகேமின் தகப்பனான சல்மா, பெத்காதேரின் தகப்பனான ஆரேப்.
52கீரியாத்யாரீமின் தகப்பனான சோபாலின் சந்ததிகளாவன: ஆரோயேயும், மெனுகோத்தியரின் அரைப்பகுதியினரும்.
53கீரியாத்யாரீமின் குடும்பங்களாவன: இத்திரியர், பூகியர், சுமாத்தியர், மிஸ்ராவியர் ஆகியோரே. இவர்களில் இருந்தே சோராத்தியர், எஸ்தாவோலியர் ஆகிய சந்ததிகள் வந்தனர்.
54சல்மாவின் சந்ததிகள்: பெத்லெகேமியர், நெத்தோபாத்தியர், அதரோத் பெத்யோவாப்பியர், மானாத்தியரின் அரைப்பகுதியினர், சோரியர் ஆகியோரே.
55அத்துடன் யாபேஸில் குடியிருந்த எழுத்தாளரின் வம்சங்கள்: திராத்தியர், சிமாத்தியர், சுக்காத்தியர். இவர்கள் ஆமாத்திலிருந்து வந்த ரேகாப்பின் தகப்பனின் சந்ததியான கேனியர்.
Original work: Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™
பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc.
Original work: Biblica® Open Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission for the original work. This independent Divine Threads reading adaptation is not a Biblica-branded publication or endorsement.

The original Bible translation is available under Creative Commons Attribution-ShareAlike 4.0 International (CC BY-SA 4.0). The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible. Source and full copyright and trademark requirements. Changes in this Divine Threads adaptation: reading text is arranged in verse rows and source HTML, navigation, editorial headings, introductions and note popups are omitted. Original Scripture wording and combined verse labels are retained. This adaptation of Scripture remains under CC BY-SA 4.0; Divine Threads research studies are separately authored.