தமிழ் சமகால வேதாகமம் — 2022 (Biblica மூல உரை)

சங்கீதம் 112

இந்த அதிகாரத்தைத் தமிழில் வாசிக்கலாம். Divine Threads ஆய்வுகள் பின்னர் சேர்க்கப்படும்.

1அல்லேலூயா. யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும், அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
2அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்; நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
3செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது.
4நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்; ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள்.
5தாராள மனதுடன் கடன்கொடுத்து, தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும்.
6நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்; நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள்.
7துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது.
8அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது; கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான்.
9அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்; அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது; அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான்.
10கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்; அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்; கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும்.
Original work: Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™
பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc.
Original work: Biblica® Open Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission for the original work. This independent Divine Threads reading adaptation is not a Biblica-branded publication or endorsement.

The original Bible translation is available under Creative Commons Attribution-ShareAlike 4.0 International (CC BY-SA 4.0). The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible. Source and full copyright and trademark requirements. Changes in this Divine Threads adaptation: reading text is arranged in verse rows and source HTML, navigation, editorial headings, introductions and note popups are omitted. Original Scripture wording and combined verse labels are retained. This adaptation of Scripture remains under CC BY-SA 4.0; Divine Threads research studies are separately authored.